அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 93 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் காணவில்லை. சுற்றுலா நகரமான லஹைனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 2,200 கட்டிடங்கள் அழிந்தன. 850 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.உடலைக் கண்டுபிடிக்க பயிற்சி பெற்ற நாய்களைக் கொண்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஹவாயில் ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மோசமான பேரழிவில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று ஆளுநர் ஜோஷ் கிரீன் கூறினார். இதுவரை, மூன்று சதவீத பேரிடர் பகுதியில் மட்டுமே தேடுதல் குழு சோதனை செய்ய முடிந்தது.