உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான உலகளாவிய உச்சி மாநாடு குஜராத் மாநிலம் காந்தி நகரில் தொடங்கியது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இணைந்து நடத்திய உச்சிமாநாட்டை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா தொடங்கி வைத்தார். உலக சுகாதார நிறுவனம் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை கடந்த ஆண்டு நிறுவியது.காந்திநகரில் ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.உச்சிமாநாடு நாளை நிறைவடைகிறது.