அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை சீனப் பகுதிகளாக சித்தரிக்கும் வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. இதற்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர்களை மாற்றிய சீன நடவடிக்கை குறித்து இந்தியா முன்பு கேள்வி எழுப்பியது.பிரிக்ஸ் மாநாட்டிற்குப் பிறகு, ஜி20 உச்சி மாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லி வரவிருக்கும் போது சீனாவின் புதிய நடவடிக்கை வந்துள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபருக்கும் இடையே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.