ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பெய்த கனமழையால் 8 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் துங்கர்பூர் மாவட்டத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளது. இது தவிர, பாலி, பிரதாப்கர், சிரோஹி, உதய்பூர் மற்றும் பன்ஸ்வாரா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.சில மாவட்டங்களில் பயிர்களும் சேதமடைந்துள்ளன. பன்ஸ்வாரா கோட்டத்தின் பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.வடமேற்கு ரயில்வே 4 ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளது.உதைபூர், சிரோஹி, ஜலோர், பாலி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கும், துங்கர்பூரில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.