ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இருதரப்பு கூட்டத்தில் 2024 குடியரசு தின விழாவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடனை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார். இது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.2015ல் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, 2007ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 2008ல் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி ஆகியோர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.