கனேடிய குடிமக்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

By: 600001 On: Sep 21, 2023, 6:19 AM

 

கனடாவில் அதிகரித்து வரும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்களும், அங்கு செல்லத் திட்டமிடுபவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை அடுத்து, கனடாவுடனான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்களது தூதரக பிரதிநிதிகளை வெளியேற்றிவிட்டன.கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் அல்லது டொராண்டோவில் உள்ள தூதரகத்தில் madad.gov.in இல். இணையதளம் மூலம் பதிவு செய்வது கட்டாயம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.