பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பாரத் மண்டபத்தில் ஜி20 குழுவுடன் கலந்துரையாடுகிறார். இந்த விழாவில் ஜி20 மாநாட்டின் வெற்றிக்கு பங்களித்த சுமார் 3,000 பேரிடம் பிரதமர் உரையாற்றுகிறார். பின்னர் இரவு உணவு இருக்கும். உச்சிமாநாட்டை சுமூகமாக நடத்துவதற்கு உழைத்த பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர்கள், பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் விழாவில் கலந்துகொள்வார்கள்.இந்த விவாதத்தில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.