பாலிவுட்டின் கிங், ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் உலகளவில் 1000 கோடி கிளப்பில் நுழைந்துள்ளது. இதன் மூலம் ஒரே வருடத்தில் 1000 கோடி கிளப்பில் நுழைந்த இரண்டு படங்களின் ஹீரோ என்ற பெருமை கிங் கானுக்கு கிடைத்துள்ளது. இப்படத்தின் உலகளாவிய வசூல் இதுவரை 1004.92 கோடிகள்.வசூல் புள்ளிவிவரங்களை தயாரிப்பாளர்களான ரெட் சில்லிஸ் வெளியிட்டுள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் 500 கோடி வசூல் செய்தது. 1000 கோடி கிளப்பில் நுழைந்த ஷாருக்கின் இரண்டாவது படம் ஜவான். முதல் படமான 'பதான்' 27 நாட்களில் 1000 கோடியை எட்டியது.