2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 4x400 தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முஹம்மது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல் மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.இந்த அற்புதமான வெற்றி அர்ப்பணிப்பு மற்றும் பல வருட பயிற்சியின் பலன் என்று கூறினார்.இதனுடன், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவினாஷ், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்மிலன் பெயின்ஸ் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் ஆகியோரை பிரதமர் பாராட்டினார். விதிவிலக்கான திறமை மற்றும் நுட்பத்துடன், அவர்கள் தேசத்தை கொண்டாடுவதற்கு ஒரு சிறந்த காரணத்தை வழங்கியுள்ளனர்.