ஹாங்காங்கில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய கொய்னு புயல், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் மேற்குக் கரையைக் கடந்து மேற்கு-தென்மேற்கு நோக்கி நகர்ந்ததாக ஹாங்காங்கின் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மாநகர அதிகாரிகள் கனமழை எச்சரிக்கை விடுத்தது ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்த நாள் ஹாங்காங்கின் பெரும்பாலான பகுதிகளில் 150 மிமீ மழை பெய்துள்ளது. ஹாங்காங் தீவின் சில நகர்ப்புறங்களில் 300மிமீ மழை பெய்துள்ளது.