ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அதே பகுதியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஹெராத் மாகாணத்தின் தலைநகரான ஹெராத்துக்கு வெளியே 28 கிலோமீட்டர் தொலைவில் புதிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 கிராமங்களில் உள்ள சுமார் 2,000 வீடுகள் இடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்வைகள், உணவு மற்றும் இதர பொருட்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரே ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.