தெற்கு இஸ்ரேலிய சமூகங்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு காரணமான இரண்டு ஹமாஸ் தளபதிகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) கொன்றுள்ளது. ஹமாஸ் வான்வழி அமைப்பின் தலைவர் மெராட் அபு மெராட் மற்றும் கமாண்டோ படைகளின் நிறுவனத் தளபதி அலி காதி ஆகியோர் கொல்லப்பட்டனர்.காதி 2005 இல் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார், ஆனால் 2011 இல் விடுவிக்கப்பட்டார். காசாவில் சுமார் 120 பொதுமக்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக IDF தெரிவித்துள்ளது. இந்த மோதலில் இஸ்ரேலில் 1,300 பேரும், காஸாவில் 2,200 பேரும் கொல்லப்பட்டனர். வடக்கு காசாவில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வெளியேற்றுவதற்கு IDF அழைப்பு விடுத்துள்ளது.