வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இஸ்ரேல் பிரதிநிதியுடன் உரையாடினார்

By: 600001 On: Nov 5, 2023, 1:01 PM

 

வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் எலி கோஹனுடன் தொலைபேசியில் உரையாடினார். தற்போதைய நிலைமை குறித்த இஸ்ரேலின் மதிப்பீட்டைப் பகிர்ந்து கொண்டதற்காக கோஹனை டாக்டர் ஜெயசங்கர் பாராட்டினார்.பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை பின்பற்றுவதற்கும், இரு நாடுகளின் தீர்வுக்கும் இந்தியாவின் உறுதியான உறுதிப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சி தலைவர் பீட்டர் டட்டன், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார்.இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு கூட்டாண்மை, இந்தோ-பசிபிக், மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளுக்கு வலுவான ஆதரவு அளித்ததற்காக டாக்டர் ஜெய்சங்கர் மீண்டும் திரு டட்டனுக்கு நன்றி தெரிவித்தார்.