ஒன்வாடின் ஏரியில் பனிப்பாறையில் விழுந்து 60 வயது முதியவர் உயிரிழந்தார்

By: 600001 On: Jan 2, 2024, 3:07 AM

ஒன்வாட்டின் ஏரியில் பனிப்பாறையில் விழுந்து 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சட்பரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஹன்மர் சமூகத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். கிரேட்டர் சட்பரி காவல் சேவை, கிரேட்டர் சட்பரி தீயணைப்பு சேவைகள் மற்றும் ஈஎம்எஸ் ஆகியவற்றின் அவசரக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஏரியிலிருந்து மயக்கமடைந்த நபரை மீட்டனர்.அவரது உயிரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் சட்பரி பொலிஸார் மரண விசாரணை அதிகாரியின் உதவியை கோரியுள்ளனர்.