மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

By: 600001 On: Mar 23, 2024, 4:53 PM

 

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் 40 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இசை நிகழ்ச்சியின் போது முககவசம்  அணிந்த மர்ம நபர்கள் பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. கும்பலில் ஐந்து பேர் இருந்தனர். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து கட்டிடத்தில் பல வெடிப்புகள் நிகழ்ந்தன. கட்டிடத்தில் இருந்து தீ எழும்பும் காட்சிகளும் வெளியாகின. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.