அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்கிறது

By: 600001 On: Mar 24, 2024, 4:16 PM

 

 

டெல்லி: இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து நான்காவது வாரமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் தற்போதைய கையிருப்பு $642.292 பில்லியன் ஆகும். வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு 6.396 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.