அதானி க்ரீன் எனர்ஜி அடுத்த ஆண்டுக்குள் 25 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இலக்கை அடைய பாரிய வளங்களை திரட்டி வருகிறது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 400 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 3400 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது. இந்தத் தொகை மூலதன முதலீட்டுக்குப் பயன்படுத்தப்படும்.
இது தவிர பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரத்தை வெளியிடவும் அதானி திட்டமிட்டுள்ளது. அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை வந்த பிறகு, இவ்வளவு பெரிய தொகையை கடன் மூலம் திரட்ட அதானி திட்டமிட்டிருப்பது இதுவே முதல் முறை.