ஏர்ட்ரீ ஆர்சிஎம்பி போலியான ஐபோன்கள் ஆன்லைன் சந்தையில் விற்கப்படுவது குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சமீப காலமாக போலி ஐபோன் மோசடிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. தொலைபேசி சீல் செய்யப்பட்ட ஐபோன் பெட்டியில் முறையான லேபிளிங்கில் விற்கப்பட்டதாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர் இது முறையான விற்பனை என்று நினைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அந்த போனில் உள்ள ஆப்பிள் வசதிகளை பயன்படுத்த முயன்ற போது அது போலியான போன் என்றும் மோசடி என்றும் தெரிந்தது. ஆப்பிள் ஸ்டோருக்கு போனை எடுத்துச் சென்று ஆய்வு செய்ததில் அது போலியானது என உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஏர்ட்ரீ ஆர்சிஎம்பி ஆன்லைனில் போன்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் எச்சரித்துள்ளது. பல தயாரிப்புகள் முறையானவையாகத் தோன்றலாம் ஆனால் போலியானவையாக இருக்கலாம் என்றும், மோசடிக்கு இரையாகாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கின்றனர்.