பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்ப் தாக்கப்பட்டார். அவர் பொதுக்கூட்டத்தில் பேசும் போது துப்பாக்கி சூடு நடத்த முயற்சி நடந்தது. மேடையில் படுகாயம் அடைந்த டிரம்ப்பை, பாதுகாப்பு படையினர் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த தாக்குதலில் ட்ரம்ப் படுகாயம் அடைந்தாலும், அவரது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் மற்றும் பேரணியில் கலந்து கொண்ட ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரணியில் கலந்துகொண்ட மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட தகவலை அதிபர் ஜோ பிடனுக்கு வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. டிரம்ப் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாகவும் டிரம்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கேலரியில் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். டிரம்ப் படுகொலை முயற்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.