ஜம்மு காஷ்மீர் தோடாவில் என்கவுன்டர்: ஒரு மேஜர் உட்பட 4 வீரர்கள் வீரமரணம்

By: 600001 On: Jul 16, 2024, 3:11 PM

 

 

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேஜர் பிரிஜேஷ் தாபா, டி ராஜேஷ், பிஜேந்திரா மற்றும் அஜய் ஆகிய நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நேற்று இரவு 8 மணியளவில் தோடா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ஜம்மு காவல்துறை மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.