பாங்க் ஆஃப் கனடா அதன் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் குறைத்தது. பணவீக்கம் மற்றும் பலவீனமான பொருளாதாரம் காரணமாக தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் அடிப்படை வட்டி விகிதம் 4.50 ஆக உள்ளது. ஜூன் மாதத்தில், வட்டி விகிதம் ஐந்து சதவீதத்தில் இருந்து 4.75 சதவீதமாக கால் சதவீதம் குறைக்கப்பட்டது.
இதேவேளை, பணவீக்கம் தொடரும் பட்சத்தில் மேலும் விகிதக் குறைப்பு முடிவுகளை எதிர்பார்க்கலாம் என ஆளுநர் டிஃப் மெக்லெம் சுட்டிக்காட்டியுள்ளார். மந்தநிலை காரணமாக ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 6.4 சதவீதமாக இருந்தது. ஆண்டு பணவீக்கம் மே மாதத்தில் மீண்டும் உயர்ந்த பின்னர் ஜூன் மாதத்தில் 2.7 சதவீதமாக குறைந்துள்ளது.