டெல்லி: ரஷ்யாவில் உக்ரைன் தரப்பினர் நடத்திய ஷெல் தாக்குதலில் திருச்சூர் கல்லூரைச் சேர்ந்தவர் பலியானார். கல்லூர் நயிரங்காடியைச் சேர்ந்த கண்கில் சந்திரனின் மகன் சந்தீப் என்பவரே உயிரிழந்துள்ளார். சந்தீப் உள்ளிட்ட 12 பேர் கொண்ட ரோந்துக் குழுவினர் கொல்லப்பட்டது மலையாளி சங்கம் மூலம் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. சாலக்குடியில் உள்ள ஏஜென்சி மூலம் சந்தீப் கடந்த ஏப்ரல் 2ம் தேதி ரஷ்யா சென்றார்.
சடலம் ரஷ்யாவில் உள்ள மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுமுறை என்பதால் மலையாளி சங்க நிர்வாகிகளால் உடலைப் பார்க்க முடியவில்லை என்று உறவினர்களிடம் இருந்து கிடைத்த தகவல். அந்த உடல் சந்தீப்புடையதுதானா என்பதை அவரது படத்தைப் பயன்படுத்தி நாளை உறுதிப்படுத்த முயற்சிப்பார்கள். மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது