டெல்லி: இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம். அணுமின் நிலையங்களின் செயல்பாட்டில் ஒருவருக்கொருவர் உதவ முடிவு செய்யப்பட்டது. இதில், அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் வருகையின் போது இரு நாடுகளும் ஐந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஷேக் காலித் ஆகியோர் நடத்திய கலந்துரையாடலில்
மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா அதிக இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வாங்க உள்ளது இதற்கான நீண்ட கால ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் சந்தித்தார்.