அதிக அழுத்தம் காரணமாக எரிபொருள் பம்ப் வெடித்து, எரிபொருள் கசிவு மற்றும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், 7 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது ஹோண்டா. அக்டோபர் மாதத்தில் ஹோண்டா வாகனங்கள் குறைபாடு காரணமாக திரும்பப் பெறப்படுவது இது இரண்டாவது முறையாகும். 2023-24 மாடல் ஆண்டு அக்கார்ட் மற்றும் அக்கார்டு ஹைப்ரிட், சிவிக், சிவிக் ஹைப்ரிட் 2025 மற்றும் சிஆர்-வி ஹைப்ரிட் 2023-2025 மாடல்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன. அக்டோபர் தொடக்கத்தில், 1.7 லட்சம் வாகனங்களில் ஸ்டீயரிங் பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து ஹோண்டா நிறுவனம் திரும்பப் பெற்றது.
பிப்ரவரி 2023 முதல் செப்டம்பர் 2024 வரை, எரிபொருள் கசிவு பிரச்சினை தொடர்பான இறப்புகள் அல்லது காயங்கள் எதுவும் இல்லை என்று ஹோண்டா தெரிவித்துள்ளது. டீலர்கள் பழுதடைந்த எரிபொருள் பம்பை சரிபார்த்து அதை இலவசமாக மாற்றுவார்கள் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் தகவலுக்கு, நிறுவனத்தை 1-888-234-2138 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.