டெல்லி: 2024ல், ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றை பாரிஸில் படைத்த 'வினேஷ் போகட்' பெயரை இந்தியர்கள் அதிகம் தேடினர். பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக புகார் அளித்தது மற்றும் 2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானாவிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட செய்திகளில் வினேஷ் போகட் உள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் தனது தீர்க்கமான நகர்வுகளால் நிதிஷ் குமார் மிகவும் கவனத்தை ஈர்த்தார். சிராக் பாஸ்வான் மூன்றாவது இடத்தையும், ஹர்திக் பாண்டியா நான்காவது இடத்தையும் பிடித்தனர். இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஐந்தாவது பெயர் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் பெயர்.
ஷஷாங்க் சிங், பூனம் பாண்டே, ராதிகா மெர்ச்சன்ட், அபிஷேக் சர்மா, லக்ஷ்யா சென் மற்றும் பலர் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்தனர். கூகுள் தேடலில் 10 பேரில் 5 பேர் விளையாட்டு வீரர்கள் என்பது சுவாரஸ்யமான செய்தி.