வடகிழக்கு கால்கரியில் உள்ள ஒரு வீட்டில் அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி நடத்திய தாக்குதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் சாடில்ஹார்ன் டிரைவில் உள்ள ஒரு வீடு உடைக்கப்பட்டபோது இந்தத் தாக்குதல் நடந்தது. பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதல் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சந்தேக நபர் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றும், விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.