இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் உடன்பாடு எட்டவில்லை. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1, 2025 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். தெற்கு எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதால், அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் இடையூறு ஏற்படக்கூடும்.