தமிழக அரசு, பெண்களின் திருமண நலனைக் கருத்தில் கொண்டு, “தாலிக்கு தங்கம் திட்டத்தை” மேம்படுத்தி, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசாங்கம் ரூ.45 கோடி மதிப்பில் 5,460 தங்க நாணயங்கள் வழங்கும் டெண்டரை அறிவித்துள்ளது.
சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மகள்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும்.
பட்டம் பெற்ற மாணவிகளுக்கோ, 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும். இதனால், படித்த மகள்களின் திருமணச் செலவுகளை எளிதாக்க அரசு பெரும் துணையாக இருக்கும்.
இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம், பெண்களின் சமூக நிலையை உயர்த்தவும், குடும்ப நலனை பாதுகாக்கவும் பெரும் பங்களிப்பாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.