ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் முடி காணப்பட்ட வழக்கில் ரூ.35,000 இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற சிவில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏர் இந்தியா தாக்கல் செய்த மேல்முறையீட்டில், இழப்பீட்டுத் தொகையை ரூ.35,000 ஆக உயர் நீதிமன்றம் குறைத்துள்ளது.
கொழும்பிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர் தனது உணவில் முடியைக் கண்டார். விமானப் பணிப்பெண்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் நீதிமன்றத்தை அணுகினார்.