கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த மாதம் கேரளாவிற்கு வரமாட்டார்கள். போட்டியை நடத்த FIFA அனுமதி பெறப்படவில்லை என்று ஸ்பான்சர்களில் ஒருவரான அன்டோ அகஸ்டின் சமூக ஊடகங்களில் ஒப்புக்கொண்டார்.
உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி நவம்பர் மாதம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் விளையாடும் என்பது ஆரம்பத்தில் இருந்தே அறிவிப்பு. கொச்சி மைதானத்தில் புதுப்பித்தல் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், அதை சரியான நேரத்தில் முடிக்க முடியவில்லை.