மெக்சிகோவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர். சுமார் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர். வடக்கு மெக்சிகோ மாநிலமான சோனோராவின் தலைநகரான ஹெர்மோசிலோவில் இந்த சம்பவம் நடந்தது.
நாட்டின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான இறந்தவர்களின் நாள் தொடர்பான கொண்டாட்டங்களின் போது இந்த சோகம் நிகழ்ந்தது. கொண்டாட்ட நாளில் ஏற்பட்ட சோகம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக சோனோரா மாநில ஆளுநர் அல்போன்சோ துராசோ ஒரு வீடியோ செய்தியில் தெரிவித்தார்.