மத்திய பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில் குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 13 பேர் காணாமல் போயுள்ளனர். மக்கள் வீடுகளில் சிக்கியுள்ளதாகவும், பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கார்கள், லாரிகள் மற்றும் பிற கொள்கலன்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.