அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிர்ச்சியூட்டும் கூற்றை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. அணு ஆயுத சோதனைகளை நடத்திய முதல் நாடு தாங்கள் அல்ல என்றும், அவற்றை மீண்டும் தொடங்கும் முதல் நாடு தாங்கள் அல்ல என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், சோதனைகள் மீது ஒருதலைப்பட்ச தடையை பாகிஸ்தான் கடைப்பிடிப்பதாகவும், நிதானத்தைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் பாகிஸ்தான் மூத்த பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.