ஜெர்மனியில் 10 நோயாளிகளைக் கொன்றதற்காகவும், பணிச்சுமையை குறைக்க 27 பேரைக் கொல்ல முயன்றதற்காகவும் ஒரு செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 44 வயதான செவிலியர் செய்த குற்றங்கள் மிகவும் கடுமையானவை என்றும் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட செவிலியர் இரவு ஷிப்டுகளில் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் வயதான நோயாளிகளுக்கு அதிக அளவு போதைப்பொருள் அல்லது வலி நிவாரணிகளை செலுத்தியதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இந்த சம்பவம் டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை ஜெர்மனியின் ஆச்சர் அருகே உள்ள வுர்செலனில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்தது. அதிகப்படியான வலி நிவாரணிகளை வழங்குவதன் மூலம் கொலைகள் செய்யப்பட்டன.