சீன ரோபோ ஒன்று 100 கிலோமீட்டர் நடந்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது. இந்த மனித உருவம் கொண்ட ரோபோ மூன்று நாட்களில் 100 கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்றது. AG A2 என பெயரிடப்பட்ட இந்த ரோபோ, கால்நடையாகவே நடந்து சென்றது. இதுவரை ஒரு மனித உருவம் கொண்ட ரோபோவிற்கு பதிவான மிக நீண்ட தூரம் இதுவாகும்.
சுமார் 5 அடி 6 அங்குல உயரம் கொண்ட AG A2, நவம்பர் 10 ஆம் தேதி மாலை கிழக்கு சீன நகரமான சுசோவிலிருந்து புறப்பட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்கள் வழியாக பயணித்து, 13 ஆம் தேதி ஷாங்காயில் உள்ள பண்ட் பகுதியை வந்தடைந்ததாக கின்னஸ் சாதனைகள் தெரிவிக்கின்றன.