டிட்வா புயல் காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. இலங்கையின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்த புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. இலங்கையின் 20 மாவட்டங்களில் சுமார் 200,000 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதுளை மற்றும் நுவரெலியா பகுதிகளில் சுமார் 30 பேர் காணாமல் போயுள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 50,000 பேர் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.