சென்னையில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. வடக்கு மற்றும் மத்திய சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பூர் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் நீர்மட்டம் நான்கு அடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.