டெல்லியில் இருந்து மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் வலது எஞ்சின் திடீரென எண்ணெய் அழுத்தத்தை இழந்ததால், விமானம் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
போயிங் 777-337 ER அதிகாலை 3.20 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, இரண்டாவது எஞ்சினில் எண்ணெய் அழுத்தத்தில் அசாதாரண வீழ்ச்சியை விமானிகள் கவனித்தனர்.