ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வீழ்ச்சிக்காக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கிறிஸ்துமஸ் பிரார்த்தனை செய்துள்ளார். ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், தனக்கும் உக்ரைன் மக்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்திய ரஷ்ய அதிபரின் வீழ்ச்சிக்காக ஜெலென்ஸ்கி பிரார்த்தனை செய்தார். இருப்பினும், அந்த பிரார்த்தனையில் புடினின் பெயர் குறிப்பிடப்படவில்லை.