பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஜம்முவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இந்தியாவில் இருந்து குழந்தைகளை உளவு பார்க்கச் சேர்க்க முயற்சிப்பது கவலை அளிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல குழந்தைகள் கண்காணிப்பில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.