தெற்கு ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதியதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 150 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு கோர்டோபா நகருக்கு அருகிலுள்ள அடமாஸ் நகருக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரயில் தடம் புரண்டு அருகிலுள்ள தண்டவாளத்தில் விழுந்தது. பின்னர் அதே பாதையில் பயணித்த மற்றொரு அதிவேக ரயில் மோதியதால் விபத்து மேலும் மோசமாகியது.