தெற்கு பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு மூழ்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். ஜோலோ தீவுக்கு 350 பேருடன் சென்று கொண்டிருந்த 'எம்வி த்ரிஷா கெர்ஸ்டின் 3' என்ற பயணிகள் படகு மூழ்கியது. பல பயணிகள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன 100க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.