ஈரான் போர் குறித்த தங்கள் செய்தியளிக்கும் முறையை மாற்றிக்கொண்டு, பொதுநலன் சார்ந்தே செயல்படாவிட்டால், அமெரிக்கச் செய்தி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படக்கூடும் என்று ஃபெடரல் தகவல் தொடர்பு ஆணையத்தின் (FCC) தலைவர் பிரெண்டன் கார் எச்சரித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்தத் தொலைக்காட்சிகள் பிரச்சாரங்களையும் போலிச் செய்திகளையும் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். டிரம்ப் மற்றும் அவரது பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்னரே முன்வைத்துள்ளனர்.