ஈரானுடன் தொடர்புடைய ஹேக்கர்களால் நடத்தப்பட்ட ஒரு சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனத்தின் செயல்பாடுகள் ஐந்து நாட்களுக்கும் மேலாக முடங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான 'ஸ்ட்ரைக்கர் கார்ப்பரேஷன்' (Stryker Corporation) இந்தச் சைபர் தாக்குதலுக்கு ஆளானது.
இதனைத் தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட்டின் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்படி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டு, அமெரிக்க அரசாங்க முகமை ஒன்று வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 'சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு முகமை' (Cybersecurity and Infrastructure Agency) அந்நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்தது.