வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை, சுமார் இரண்டு மணி நேரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் காற்று, மழை மற்றும் மின்னல் தாக்கம் நிலவியது. சாலைகளில் பெருமளவில் நீர் தேங்கியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன; பலத்த காற்றின் காரணமாகச் சில ஹோட்டல்களின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன; விளம்பரப் பலகைகளும் சரிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீரில் மூழ்கின.
துபாய்-ஷார்ஜா சாலை நீரில் மூழ்கியது. நகரின் முக்கிய சாலையான 'ஷேக் சயத் சாலை'யின் (Sheikh Zayed Road) இணைப்புச் சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.