அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளைக் கண்டித்து, அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சேர்த்து 3,200-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு "மன்னர்கள் வேண்டாம்" (No Kings) என்ற முழக்கத்தின் கீழ் நடைபெற்ற இரண்டு பேரணிகளின் தொடர்ச்சியாகவே இப்போராட்டங்கள் அமைந்திருந்தன.