ஆர்டெமிஸ் II விண்கலம் புதன்கிழமை காலை வெற்றிகரமாக ஏவப்பட்டது. நான்கு பேர் கொண்ட குழுவினர் நிலவிற்கான வரலாற்று சிறப்புமிக்க பயணத்தைத் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு நாசா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அப்பல்லோ 11 பயணங்களுக்குப் பிறகு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்படும் முதல் மனிதர்கள் பயணிக்கும் நிலவுப் பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தில் பங்கேற்கவுள்ள நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற ஓரியன் விண்கலம், ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது. இந்த நிகழ்வின் காணொளியை நாசா வெளியிட்டுள்ளது. முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த முக்கிய சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஓரியன் விண்வெளி வீரர்கள் விண்கலத்தைத் தாங்களே கட்டுப்படுத்தியதாக நாசா அந்தக் காணொளியில் தெரிவித்துள்ளது.