ராஜஸ்தான் மாநில அரசு, மாணவர்களின் பெயர்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக 'சார்தக் நாம் அபியான்' (Sarthak Naam Abhiyan) என்ற திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. அவமதிக்கும் வகையிலோ அல்லது அர்த்தமற்ற வகையிலோ பெயர்களைக் கொண்டுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்களை மாற்றி, இத்திட்டத்தின் வாயிலாக அவர்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்ட ராஜஸ்தான் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
'ஷேரு', 'ஷைத்தான்', 'டிங்கு' மற்றும் 'காலு' போன்ற பெயர்களை மாற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகப் பொருள் பொதிந்த பெயர்களைச் சூட்டுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய தெளிவற்ற மற்றும் எதிர்மறையான பெயர்கள், குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் பாதிக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது.