ஆதித்யா தர் மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge) திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்து 30 நாட்களைக் கடந்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 1000 கோடி நிகர வசூலைப் ஈட்டிய முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற 'துரந்தர் 2', வெளியான ஒரே மாதத்தில் உலகளவில் மொத்தம் ரூ. 1783 கோடிகளை வசூலித்துள்ளது. இப்படத்தின் நிகர வசூல், இந்தியாவில் மட்டும் ரூ. 1153 கோடிகளாகப் பதிவாகியுள்ளது.