இந்திய ரயில்வே 30,000 பணியிடங்களைக் குறைக்கத் தயார்

By: 600001 On: Apr 27, 2026, 2:40 PM

 

 

இந்திய ரயில்வே நாடு முழுவதும் சுமார் 30,000 பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டில் 29,906 பணியிடங்களைக் குறைக்குமாறு, பல்வேறு மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, வடக்கு ரயில்வேயில் 3,303 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. தெற்கு ரயில்வேயில் 1,906 பணியிடங்கள் குறைக்கப்படும்.

குறைக்கப்படவுள்ள இந்தப் பணியிடங்கள் பெரும்பாலும் 'பாதுகாப்பு சாராத' (non-safety) பிரிவைச் சார்ந்தவையாகும். ஏப்ரல் 1, 2026 நிலவரப்படி அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியாளர் எண்ணிக்கையில் இரண்டு சதவீதத்தைக் குறைப்பதற்கான இலக்கு, ஒவ்வொரு பொது மேலாளருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.